லண்டனில் கடந்த 9 வாரங்களுக்கு முன் பிறந்த ஜுனியர் காக்ஸ் நூன் தனது தலைமுடியினால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.
இவரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதனால் உலக முழுவதும் பிரபலமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீட்டிலேயே குறித்த குழந்தையின் தாய் குழந்தைக்கு சிகை அலங்காரம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வாரந்தோறும் பல்பொருள் அங்காடியிற்கு குழந்தையை தூக்கிச் செல்லும் போது,40 நிமிடத்தில் முடியும் வேலை 2 மணி நேரம் இக்குழந்தையினை பிறர் கொஞ்சுவதால் செலவாகின்றது என்று அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.