ஸிக்கா வைரஸை கட்டுப்படுத்த இலங்கையிடம் உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை!!

250

zika

வேகமாகப் பரவி வரும் ஸிக்கா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளிடம், உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 3ம் திகதி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாய்லாந்தில் ஸிக்கா தொற்றினால் தலை சிறியதாக இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதை அடுத்தே உலக சுகாதார ஸ்தாபனம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

விசேடமாக ஸிக்கா வைரஸ் பரவும் சாத்தியக்கூறுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நுளம்புகள் பரவும் இடத்தை அழித்தல் உள்ளிட்ட நுளம்புகளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை தீவிரப்படுத்தல், கர்ப்பிணித் தாய்மார் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தல் போன்றவற்றில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு, உலக சுகாதார ஸ்தாபனம் ஆசிய நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் ஸிக்கா தொற்று தற்போது பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.