
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 30ம் திகதி வவுனியா சுந்தரபுரம் பகுதியின் பாடசாலை ஒன்றுக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் சுந்தரபுரம் சாஸ்திரகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கொலைசெய்யப்பட்டவரின் கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (05) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.





