சிரியா மீது போர் தொடுக்க உலகம் ஆதரிக்கிறது.. நான் கெடு விதிக்கவில்லை : ஒபாமா!!

309

opama

பொதுமக்கள் மீது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. அமெரிக்க காங்கிரசின் ஒப்புதலுக்காக அதிபர் ஒபாமா காத்திருக்கிறார்.

உள்நாட்டில் முழு ஆதரவு இன்னும் கிடைக்காத நிலையில், உலகின் ஆதரவை பெற வேண்டி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள அதிபர் ஒபாமா நேற்று சென்றார். செல்லும் வழியில் அவர் சுவீடன் தலைவர்களை இன்று சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒபாமா கூறியதாவது:- போரின் போது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று சர்வதேச விதிமுறைகளை மீறி செயல்பட்ட சிரியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று நான் எந்த கெடுவும் விதிக்கவில்லை.

எனது நிலை சிரியாவிற்கு கெடு விதிக்கவேண்டும் என்பதல்ல. ஆனால், சிரியா மீது நம்பகத்தன்மையை இழந்த சர்வதேச நாடுகள் போர் தொடுக்க ஆதரவு தெரிவிக்கின்றன.

அமெரிக்க மக்களிடத்திலும், காங்கிரசிடமும் ஒப்புதலை பெற முயற்சிகள் நடக்கின்றன. சர்வதேச விதிமுறைகளின் படி சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்ய ஜி-20 மாநாட்டின் போது, பிரான்ஸ், ஜப்பான், சீனா, ரஷ்ய உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து சிரியா மீது போர் தொடுக்க அதிபர் ஒபாமா ஆதரவு கோருவார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.