வவுனியா ஒமந்தையினை வந்தடைந்த மகேல ஜெயவர்த்தனவின் நடை பவனி!!

476

 
தெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி வடக்கில் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது. இன்று காலை 5.30 மணியளவில் புளியங்குளம் நகரில் ஆரம்பமாகி இன்று (13.10.2016) காலை 7.30 மணியளவில் ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் பண்ட் வாத்திய இசையுடன் ஒமந்தை மத்திய கல்லூரியினை வந்தடைந்தது.

இப் பேரணி 9.00 மணியளவில் வவுனியா நகரை வந்தடையும் என ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சுமார் 5 மில்லியன் நிதியினை திரட்டும் நோக்கில் வடக்கில் இருந்து தெற்கிற்கு 28 தினங்களாக பயணிக்கவுள்ள இந்த நடைபவனி கடந்த (06.10.2016 )வியாழக்கிழமை யாழ். பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கபட்டிருந்தது

ஒரு நாளில் சுமார் 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் தூரத்தை கடக்கவுள்ள இவ் நடைபவனியானது பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம், மாங்குளம், வவுனியா மதவாச்சி,கல்முனை, குருணாகல், கொச்சிக்கடை, கொழும்பு, பாணாந்துறை மற்றும் சீனிகம போன்ற நகரங்களை கடக்கவுள்ளது.

இன்று காலை வவுனியா ஒமந்தையை வந்தடைந்த இந்த நடை பவனியை பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அனுசரணையாளர்கள் எனப்பல்வேறு தரப்பினரும் வரவேற்று தங்களாலான நன்கொடைகளை வழங்கியதோடு நடை பவனியில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு மற்றும் பழங்களையும் வழங்கியிருந்தனர் .

நாளைய தினம் இந்த நடை பவனி மதவாச்சி பயணிக்கவுள்ளது.

1 dsc_0005 dsc_0007 dsc_0008 dsc_0010 dsc_0011 dsc_0014 dsc_0020 dsc_0021 dsc_0022 dsc_0023 dsc_0024 dsc_0025 dsc_0026 dsc_0028 dsc_0029 dsc_0030 dsc_0031 dsc_0032 dsc_0033 dsc_0034 dsc_0035 dsc_0036 dsc_0037 dsc_0038 dsc_0039 dsc_0040 dsc_0042 dsc_0043 dsc_0044 dsc_0045 dsc_0046 dsc_0047 dsc_0049 dsc_0050 dsc_0051 dsc_0058 dsc_0063 dsc_0064 dsc_0065 dsc_0066 dsc_0068 dsc_0070 dsc_0071 dsc_0072 dsc_0074 dsc_0075 dsc_0076 dsc_0078 dsc_0079 dsc_0081 dsc_0082 dsc_0083 dsc_0084