உலகின் மிகப் பெரிய பூசணிக்காய்!!

850

1

பெல்­ஜி­யத்தில் 1,190.5 கிலோ­கிராம் (2623 இறாத்தல்) எடை­யுள்ள பாரிய பூசணிக்காய் அறுவடை செய்யப்­பட்­டுள்­ளது. உலகில் இது­வரை அறு­வடை செய்­யப்­பட்ட மிகப் பெரிய பூசணிக்காய் இது எனக் கருதப்­ப­டு­கி­றது.

ஜேர்­ம­னியில் நடை­பெற்ற பிர­மாண்ட பூசணிக்காய் சம்­பி­யன்ஷிப் போட்­டியில் சுமார் 1000 கிலோகிராம் எடை­யுள்ள பல பூசணிக்­காய்கள் காட்­சிப்­
ப­டுத்­தப்­பட்­டன.

பெல்­ஜி­யத்தைச் சேர்ந்த சேர்ந்த மெத்­தாயஸ் வில்­லேமிஜ்ன்ஸ் என்­பவர் 1990.5 கிலோ­கிராம் எடை­யுள்ள பூசணிக்­காயை காட்­சிப்­ப­டுத்­தினார். இப் பூசணிக்காய் மேற்­படி போட்­டியில் முத­லிடம் பெற்­றது.
அதே­வேளை, இது எடை அடிப்­ப­டையில் உலக சாத­னைக்­கு­ரிய பூசணிக்­ கா­யா­கவும் விளங்­கு­கி­றது.

சுவிட்­ஸர்­லாந்தைச் சேர்ந்த பெனி மேய்யர் என்­பவர் அறு­வடை செய்த 2323 இறாத்தல் (சுமார் 1053 கிலோ­கிராம்) எடை­யுள்ள பூசணிக்­காயே மிக அதிக எடை­யுள்ள பூசணிக்­கா­யாக இறு­தி­யாக கின்னஸ் சாதனை நூலில் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

A girl plays on a giant pumpkin at the Giant Pumpkins European Championship in Ludwigsburg, southwestern Germany, on October 9, 2016.  / AFP PHOTO / THOMAS KIENZLE

3