சுயமாக தன்னை சமநிலைப்படுத்தக்கூடிய மோட்டார் சைக்கிள் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தால் அறிமுகம்!!

702

11

சுய­மாக தன்னை சம­நி­லைப்­ ப­டுத்­தக்­கூ­டிய மோட் டார் சைக்­கிளை பி.எம்.டபிள்யூ நிறு­வனம் அறிமுகப்­படுத்­தி­யுள்­ளது. அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்­தின் சான் ட்ட மோனிக்கா நகரில் நடை­பெற்ற கண்­காட்­சி­யொன்றில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்த மோட்டார் சைக்கிள் காட்சிப்படுத்­தப்­பட்­டது.

ஜேர்­ம­னியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ வாகனத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மா­னது தனது 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்­டாட்­டங்­களின் ஒரு அம்­ச­மாக இந்த மோட்டார் சைக்­கிளை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

Motorrad Vision Next 100 எனும் இந்த மோட்டார் சைக்­கி­ளா­னது மிகப் பாது­காப்­பா­னது எனவும் இதை செலுத்­தும்­போது தலைக்­க­வனம் அணியத் தேவை­யில்லை எனவும் இந் ­நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது.

மோட்டார் சைக்கிள் சுய­மாக சம­நி­லைப்­ப­டுத்­தப்­ப­டக்­ கூ­டி­ய­வாறு இதன் சக்­க­ரங்கள் வடிவமைக்கப்பட்­டுள்­ளன. மோட்டார் சைக்கிள் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கும்­போ­து­ கூட இது சரிய மாட்­டாது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

“இந்த சுய சம­நி­லைப்­ப­டுத்தல் பொறி­முறை மூலம் இம்­ மோட்டார் சைக்­கிளை செலுத்­து­ப­வர்கள் எந்த நேரத்­திலும் பாது­காக்­கப்­ப­டுவர்.

இதனால் இத் ­தொ­ழில்­நுட்பம் மூலம் எதிர்­கா­லத்தில் தலைக்­க­வசம் அணி­யா­மலும் மோட்டார் சைக்­கி­ளோட்­டிகள் பயணம் செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்கும்” என பி.எம்.டபிள்யூ நிறு­வன மோட்டார் சைக்கிள் பிரிவின் வடி­வ­மைப்புப் பணிப்­பாளர் எட்கார் ஹென்ரிச் தெரி­வித்­துள்ளார்.

இம்­ மோட்டார் சைக்கிள் சூழ­லுக்கு மாசு ஏற்­ப­டுத்தும் வாயு எத­னையும் வெளியிடமாட்டாது.
எவ்வாறெனினும் இது ஓட்டுநர் இன்றி சுயமாக செலுத்தப்படக்கூடிய மோட்டார் சைக்கிள் அல்ல எனவும் எட்கார் ஹென்ரிச் தெரிவித் துள்ளார்.

12