பாரிய கரடியை வீட்டில் வளர்க்கும் தம்பதி!!

383

1

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பாரிய கரடியொன்றை தமது வீட்டில் வைத்து வளர்க்கின்றனர்.

சுமார் 1,500 இறாத்தல் (680 கிலோ­கிராம்) எடை கொண்­ட­தாக இந்த கரடி உள்­ளது. எனினும், இக்­ கரடியுடன் இவர்கள் கொஞ்சி விளை­யா­டு­கின்­றனர்.

இவ்­வாறு கர­டி­க­ளுடன் பழ­கு­வது ஆபத்­தா­னது. ஆனால், கொவால் ஸ்க் என்­ப­வரும் அவரின் மனைவி சுசானும் 23 வரு­டங்­க­ளாக இக்­ க­ர­டியை வளர்த்து வரு­கின்­ற­னராம்.

நியூயோர்க்­கி­லுள்ள காய­ம­டைந்த மற்றும் கைவி­டப்­பட்ட மிரு­கங்­க­ளுக்­காக இத் ­தம்­ப­தி­யினர் நடத்தும் காப்­ப­கத்­துக்கு, போத்­தலில் பால் குடிக்கும் குட்­டி­யாக இக்­க­ரடி கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது கொவால்ஸ்க் அதனை முதன்­மு­தலில் கண்டார்.

அதன்பின் அக் ­க­ரடிக் குட்­டியை அவர் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்­பித்தார். “உங்­க­ளுக்கு நேரம் இருந்தால், நாள் முழு­வதும் அத­னுடன் விளை­யாடலாம்.

அதிஷ்­ட­வ­ச­மாக இந்த கரடி தனது எடையை மற்­ற­வர்கள் மீது பிர­யோ­கிப்­ப­தில்லை. உங்கள் மீது அது சரிந்தால் பிரச்­சினை ஏற்­ப­டலாம்” என கொவால் ஸ்க் தெரி­வித்­துள்ளார்.

இந்த கர­டிக்கு ஜம்போ என பெயரி­டப்­பட்­டுள்­ளது. தவிர, மேலும் 10 கரடி­க­ளையும் இத் ­தம்­ப­தி­யினர் தமது வீட்டில் வளர்க்கின்றனர். இவை தவிர காயமடைந்த வாத்துகள், மான் போன்றவற்றுக்கும் இவர்கள் புனர் வாழ்வளித்துள்ளனர்.

2 3