இந்திய பெண் எழுத்தாளர் ஆப்கானில் சுட்டுக்கொலை : தலிபான்கள் அட்டூழியம்!!

337

taliman

இந்தியாவை சேர்ந்த சுஷ்மிதா பனர்ஜி 1989ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தொழிலதிபர் ஜானாபாஸ் கானை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.

எழுத்தாளரானா சுஷ்மிதா 1995ம் ஆண்டு தப்பியோடும் தலிபான்கள் பற்றி புத்தகம் ஒன்றை எழுதினார். இந்தியாவில் நன்றாக விற்ற அந்த புத்தகம் பின்னர் 2003ம் ஆண்டு பாலிவுட் திரைப்படமாக வெளிவந்தது.

இதனால் சுஷ்மிதா மீது கோபம் கொண்ட தலிபான்கள் அவரை கொல்ல முயற்சித்தனர். இதனால் அவர் இந்தியாவிலேயே வாழ்ந்தார். சமீபத்தில் அவர் கணவருடன் சேர்ந்து வாழ ஆப்கானிஸ்தானின் கரானாவுக்கு சென்றார். சயீத் கமலா என்ற பெயரில் மருத்துவப்பணியாளராக அங்கு வேலை பார்த்துவந்தார்.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு புகுந்த தலிபான்கள், கணவரையும் மற்றவர்களையும் கட்டிப்போட்டிவிட்டு சுஷ்மிதா பனர்ஜியை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். பின்னர் அருகிலிருந்த ஒரு மத பள்ளியில் அவரது உடலை திணித்து வைத்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.