சிறையை உடைத்து 170 கைதிகள் ஆயுதங்களுடன் தப்பி ஓட்டம்!!

333

escaped

வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் உள்ள மிக சிறிய தீவு நாடு ஹைதி. இதன் தலைநகர் போர்ட் அயு பிரின்ஸ் அருகே ஆர்சாய் என்ற இடத்தில் மத்திய சிறை சாலை உள்ளது.

இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக இங்கு தங்க வைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த சிறை சமீபத்தில் உடைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அங்கு அடைக்கப்பட்டிருந்த 170 கைதிகள் தப்பி ஓடினர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே சிறைக் காவலர்கள் அவர்களை தடுத்தனர். அதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

அதில் சிறைக்காவலர்கள் மூவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ஒருவர் பலியானார். இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே தப்பி ஓடிய கைதிகள் ஒரு சிறையில் இருந்து ஐந்து துப்பாக்கிகளை கொள்ளையடித்து சென்றனர்.

தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க ஹைதி அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிறை பகுதியில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் ரோடுகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. இதுவரை சிறையில் இருந்து தப்பிய 11 பேர் பிடிபட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.