மனிதச் சாம்பலில் பாத்திரங்களைத் தயாரிக்கும் மெக்சிக்கோ கலைஞர்!!(படங்கள்)

405

 
நியூ மெக்சிக்கோவைச் சேர்ந்த கலைஞர் ஜஸ்டின் க்ரோவ், மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி பாத்திரங்களைச் செய்து வருகிறார்.

”க்ரோனிக்கல் க்ரிமேஷன் டிசைன்” எனும் பெயரில் மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி தேநீர் கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் மற்றும் மெழுகுவர்த்தி தாங்கிகள் போன்றவற்றை ஜஸ்டின் க்ரோவ் உருவாக்குகிறார்.

2015 ஆம் ஆண்டில் Project ஒன்றிற்காக 200 மனித எலும்புகளை விலைக்கு வாங்கி அவற்றைத் தூளாக்கி, மண்ணுடன் கலந்து பாத்திரங்களை உருவாக்கியுள்ளார்.

பின்னர், நண்பர்களின் தூண்டுதலால் அதனைத் தற்போது தனது தொழிலாக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் மனிதச் சாம்பலைக் கேட்டு விளம்பரம் செய்தபோது, எதிர்வினைகள் மிக மோசமாக இருந்ததாகவும் அதனால் இந்தத் திட்டத்தைக் கைவிட எண்ணியதாகவும் ஜஸ்டின் க்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மறுசுழற்சி முறையில் மனித எலும்புகளைப் பயன்படுத்துவதே தனது திட்டம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கென பிரத்தியேகமாக அவர் ஆரம்பித்த நிறுவனம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

பலர் இறந்தவர்களின் எலும்புகளைப் பாத்திரமாக்கி, தங்களுடன் வைத்துக்கொள்ள விரும்புகின்றார்கள்.

”முதிய மனிதர் ஒருவரின் உடலை எரித்தால் 1.8 கிலோவில் இருந்து 2.7 கிலோ வரை சாம்பல் கிடைக்கும். பாத்திரம் செய்வதற்கு 100 கிராம் சாம்பல் மட்டுமே போதுமானது. சாம்பல், மண், தண்ணீர் எல்லாம் சேர்த்து, அழகான பாத்திரங்களை உருவாக்கிவிடுகிறோம். இந்தப் பாத்திரங்களை அடுப்பில் வைக்கலாம். உணவு சமைக்கலாம். கோப்பைகளில் காபி குடிக்கலாம். உங்களுக்கு மட்டுமே இது மனித சாம்பலில் செய்தது என்று தெரியும். மற்றவர்களுக்குச் சாதாரண பீங்கான் பாத்திரங்களாகத்தான் தோன்றும்’ என ஜஸ்டின் க்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.

1 2 3 4 6