விமானத்தில் வெடிகுண்டு புரளி கிளப்பிய நபர் : 75 லட்சம் அபராதம் விதித்த பொலிஸ்!!

277

air

சுவிஸ்லாந்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பிய நபருக்கு அந்நாட்டு பொலிசார் 75 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸில் உள்ள ஜெனிவா விமான நிலையத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த அக்டோபர் 13ம் திகதி பிற்பகல் 1 மணியளவில் ரஷ்யா தலைநகரான மாஸ்கோவிற்கு Aeroflot என்ற விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது. விமான குழுவினர் உள்ளிட்ட 115 பேர் இருந்த விமானம் ஓடுதளத்தில் புறப்பட்டபோது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இத்தகவலால் அதிர்ச்சி அடைந்த பொலிசார் உடனடியாக விமானத்தை திரும்ப வரவழைத்து அனைத்து பயணிகளையும் வெளியேற்றியுள்ளனர். பின்னர், சுமார் 100க்கும் அதிகமான பொலிசாரை கொண்டு விமானத்தில் தேடுதல் பணி நடந்துள்ளது.

ஆனால், சில மணி நேரத்திற்கு பிறகு வெடிகுண்டு தகவல் வெறும் புரளி என தெரியவந்தது.

விசாரணையை தொடங்கிய பொலிசார் இத்தகவலை அளித்த நபரை உடனடியாக கைது செய்தனர்.

கால தாமதம் ஆனதால் விமானத்தை பிடிக்க முடியவில்லை என்றும், இதனால் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதாக நபர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒரு இந்தியக் குடிமகன் என தெரியவந்தது.

விமானப்பயணிகளுக்கு பெருத்த அச்சுறுத்தலை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், நபரின் குற்றத்திற்கு அவர் 50,000 பிராங்க் (75,76,865 இலங்கை ரூபாய்) அபராதம் விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.