காவல்நிலையத்தில் தீக்குளித்து இறந்த திருநங்கை : காரணம் என்ன தெரியுமா?

763

aravani-thara

தமிழகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருநங்கை தீக்குளித்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தாரா என்ற திருநங்கை காலையில் வாகனம் ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது பொலிசார் அவரை இடைமறித்து விசாரணை செய்துள்ளனர், அதன் பின்னர் அவர் மது அருந்தியதாக கூறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த அத்திருநங்கையின் சகோதரிகள் காவல் நிலையத்திற்கு வந்து பார்த்த போது அவர் தீக்காயத்துடன் காவல் நிலையத்தில் உயிருக்கு போராடியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடந்த சகோதரிகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் காவல் நிலையத்தில் தாராவுடனான விசாரணையின்போது வாக்குவாதம் தீவிரமாகி, பொலிசார் அவரைத் தாக்கினார்களா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என சந்தேகத்தைக் கிளப்பியிருப்பதாக கூறி பொலிசாரை கண்டித்து திருநங்கைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.