ரணில் விக்கிரமசிங்க நாளை வவுனியா விஜயம்..!

635

ranilஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை (புதன்கிழமை) வவுனியாவிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக வடமகனசபைக்கான வவுனியா மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் பிரசாத் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

நாளை காலை 11 மணியளவில் வவுனியா கண்டிவீதியில் வரவேற்பு வைபவம் நடைபெறுவதோடு தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் வவுனியா தவசிகுளத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வவுனியா மாவட்ட ஐக்கியதேசியக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் முகமாகவே இப்பொதுக்கூட்டம் நடைபெறுமெனவும் பிரசாத் தெரிவித்தார்.