விஷப் பாம்பிடமிருந்து எஜமானைக் காப்பாற்றிய நாய்!!

698

dog

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் விஷ பாம்பிடமிருந்து தனது எஜமானரின் உயிரை நாய் காப்பாற்றியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முத்தையன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்(44). மணல் லொறி வைத்து ஓட்டி வரும் தங்கவேலு தனது வீட்டில் டாபர்மேன் வைகையைச் சேர்ந்த நாய் ஒன்றை பாசமாக வளர்த்து வருகிறார்.

அதன் பெயர் ஜொனி, நாயானது தங்கவேலு வெளியே சென்றுவிட்டு வீடு வரும் போதெல்லாம் பாசமாக தாவி விளையாடும்.

இந்நிலையில் தங்கவேலு நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய பொழுது, வழக்கத்திற்கு மாறாக இவரையும், இருசக்கர வாகனத்தையும் பார்த்து பயங்கரமாக குரைக்க ஆரம்பித்தது.

இதனால் செய்வதியாது திகைத்து போன தங்கவேலு உடனே கீழே இறங்கியுள்ளார்.

கட்டு விரியன் பாம்பு இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார் தங்கவேலு, ஜானி பாம்பை பின்தொடர்ந்து சென்று கடித்து குதறியது.

இதில் அந்த இடத்திலேயே பாம்பு உயிரிழந்தது, எஜமானின் உயிரை காப்பாற்றிய ஜானியை பலரும் பாராட்டி வருகின்றனர்.