தீவிர போராட்டத்தை முன்னெடுக்க தமிழக மீனவர்கள் தீர்மானம்!!

598

ind

இலங்கை படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிப்பதற்காக தீவிர போராட்டங்களை முன்னெக்கப் போவதாக தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.

தி ஹிந்து செய்திதாள் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களின் விளக்கமறியலை இலங்கை நீதிமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

இதனை ஆட்சேபித்தே தமது போராட்டங்களை முனைப்புப் படுத்தவுள்ளதாக தமிழக பாம்பன் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த 35 மீனவர்களும் கடந்த 26 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.