உணவு ஒவ்வாமை காரணமாக 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

781

pood

மலைநாட்டின் ஹட்டன் டிக்கோயா பெருந்தோட்டத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 100க்கும் மேற்பட்ட தமிழ் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட தோட்டத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் உற்சவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது நூறுக்கும் மேற்பட்ட உணவு பொதிகள் அடியார்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த உணவு காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமையால் இதுவரை சிறுவர்கள் உட்பட்ட நூறுக்கும் மேற்பட்டோர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாந்தி வயிற்றோட்டம், மயக்கம் என்ற குறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.