சச்சினை வீழ்த்த புதுத் திட்டம் வகுக்கும் மேற்கிந்திய தீவுகள்!!

284

Sachin

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
வருகிற 31ம் திகதி தொடங்கும் இப்போட்டிகள் நவம்பர் 27 திகதி வரை நடைபெற உள்ளது.

டெஸ்ட் போட்டிகள் மும்பை, கொல்கத்தாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினுக்கு 200வது டெஸ்ட் போட்டியாக அமையும்.

இந்நிலையில் சச்சினை இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் எடுக்க விடக்கூடாது என்பதில் மேற்கிந்திய தீவுகள் அணி முனைப்பு காட்ட தொடங்கியுள்ளது.

இதற்காக அந்த அணி சுழற்பந்து வீச்சில் தூஸ்ரா வகையை கையாண்டு சச்சினுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வகையான பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்டாக்கை சிறப்பு பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் அணி நியமித்துள்ளது.

இவர் சுனில் நரேன், டியோன் நாஸ், ஷில்லிங்போட் , தேவேந்திர பிஷூ ஆகியோருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக சக்லைன் முஸ்டாக் கூறுகையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது என்பது எல்லா அணிகளுக்குமே சவாலானது தான். இந்த தொடர் சச்சினுக்கு 200வது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளதால் பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சச்சின் போன்ற வீரர்களுக்கு பந்து வீசும் போது தான் நமது திறமை என்னவென்பது தெரியவரும். சுனில் நரேன், ஷில்லிங்போட் உள்ளிட்ட சுழற் பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சில ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.