5 ஆண்­களை ஏமாற்றி திரு­மணம் செய்துகொண்ட 23 வயதுப் பெண்!!

1143
ngs0_8146
ngs0_8146

23 வய­தான இளம் பெண் ஒருவர் நான்கு கண­வன்­க­ளுடன் வாழ்ந்து ஏமாற்றி விட்டு ஐந்­தா­வ­தாக ஒரு இளை­ஞனை திரு­மணம் செய்து வாழ்ந்த அதிர்ச்சி சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் தனியார் நிறு­வ­ன­மொன்றில் வேலை பார்த்து வரும் திருச்சி திரு­வெ­ரும்பூர் பகு­தியை சேர்ந்த அசோக் என்­பவர் அண்­மையில் மாலதி என்ற பெண்ணை காத­லித்து திரு­மணம் செய்து கொண்டார்.

இந்­நி­லையில் அந்த பகு­தியை சேர்ந்த வினோத் என்­பவர் மால­தியை தான் காத­லித்து திரு­மணம் செய்து­கொண்­ட­தா­கவும் அவரை தன்­னுடன் அனுப்பி வைக்க வேண்­டு­மெ­னவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து பொலிஸார் மால­தி­யிடம் நடத்­திய விசா­ர­ணையில் பல திடுக்­கிடும் தக­வல்கள் வெளிவந்­தன. திண்­டுக்கல் மாவட்­டத்தை சேர்ந்த மாலதி கடந்த 6 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஸ்டீபன் என்­ப­வரை காத­லித்து திரு­மணம் செய்து இரண்டு குழந்­தை­க­ளுக்கு தாயா­கி­யுள்ளார்.

இரு­வரும் ஒருநாள் வேளாங்­கன்­னிக்கு சென்­றி­ருந்தபோது, மால­திக்கு அங்கு டீக்­கடை நடத்தி வந்த நவ­நீதன் என்­ப­வ­ருடன் பழக்கம் ஏற்­பட்­டது. இதனால் அடிக்­கடி ஸ்டீப­னுடன் தக­ராறில் ஈடு­பட்டு வேளாங்­கன்­னி­யி­லுள்ள நவ­நீ­த­னுடன் தொடர்பு ஏற்­பட்டு அவ­ருடன் வாழ்க்கை நடத்­தி­யுள்ளார்.

வேளாங்­கன்­னியில் நவ­நீ­த­னுடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கும்­போது நாகையை சேர்ந்த ஒரு இளைஞருடன் மால­திக்கு பழக்கம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அந்த இளை­ஞ­னுடன் ஓட்டம் பிடித்தார் மாலதி. இரு­வரும் திருப்பூர் சென்று ஒரு தனியார் நிறு­வ­னத்தில் வேலை பார்த்து வந்­தனர். அப்­போது அந்த பகு­தியை சேர்ந்த வினோத் என்ற இளை­ஞ­ருடன் மீண்டும் மால­திக்கு பழக்கம் ஏற்பட்டுள்­ளது.

இத­னை­ய­டுத்து நாகையை சேர்ந்த இளை­ஞரை ஏமாற்­றி­விட்டு வினோத்தை நான்­கா­வ­தாக திருமணம் செய்து கொண்டார் மாலதி. ஒன்­றரை ஆண்­டு­காலம் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் ஒருநாள் திருச்சி சம­ய­புரம் கோவி­லுக்கு சென்­றுள்ளார்.

அப்­போது அவர்­க­ளுடன் வினோத்தின் நண்பன் அசோக்கும் சென்­றுள்ளான்.
அப்­போது அசோக்­கிற்கும் மால­திக்­கு­மி­டையே தொடர்பு ஏற்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து மாலதி வினோத்தை பிரிந்து அசோ­க்குடன் அவ­ரது வீட்டில் ஒரு வாரம் தங்­கி­யி­ருந்தார். அப்­போது அந்த பகு­தியை சேர்ந்­த­வர்கள் அசோக்­கிற்கும் மால­திக்கும் திரு­மணம் செய்துவைத்துள்ளனர்.

தற்போது மாலதியின் திருமண கதைகளை அறிந்த வினோத்தும், அசோக்கும் அவரை ஏற்க மறுத்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் மாலதிக்கு அறிவுறை கூறி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.