வவுனியா பொலிஸ்நிலையம் முன்பாக ஒன்று கூடிய முச்சக்கரவண்டிகள் : காரணம் என்ன?

265

 
வவுனியா பொலிஸ்நிலையத்தில் இன்று (07.12.2016) மாலை 5.00 மணியளவில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் வவுனியா,மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒழுங்கமைப்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வீதி ஒழுங்குகள், வீதிவிதிமுறைகள், விபத்துக்களை தடுப்பது எவ்வாறு, தண்டப்பத்திரம் பற்றிய விரிவாக்கம் தொடர்பாக கருத்தரங்கு நடைபெற்றது.

இக் கருத்தரங்கில் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறன கருத்தரங்குகள் இன்று வவுனியா மாவட்டத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1 dsc_0200 dsc_0201 dsc_0202 dsc_0203 dsc_0206 dsc_0207 dsc_0209 dsc_0210 dsc_0211 dsc_0212 dsc_0213 dsc_0215 dsc_0216 dsc_0217 dsc_0218 dsc_0219 dsc_0220 dsc_0222 dsc_0226 dsc_0227 dsc_0228 dsc_0229