பிரிட்டனில் கால் ஒன்றை இழந்த ஆமையொன்று நடமாட உதவுவதற்காக சக்கரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட்ஷயரிலுள்ள 7 வயதனா இந்த ஆமை, காரா பெய்ன்டோன் என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்டது.
அவ் வீட்டிலிருந்து தப்பிச் சென்ற இந்த ஆமை, காயமடைந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் உள்ர் அயலவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த ஆமைக்கு மருத்துவர்கள் சத்திரசிகிச்சை செய்தனர்.
எனினும், இந்த ஆமை கால் ஒன்றை இழந்திருந்தது. அதையடுத்து, நேதன் அலன் எனும் பொறியியலாளரின் உதவியுடன் இந்த ஆமைக்கு சக்கரம் பொருத்தப் பட்டதாக 33 வயதான காரா பெய்ன்டோன் தெரிவித்துள்ளார்.