உலக கிண்ண கால்பந்து போட்டிக்கு இதுவரை 10 அணிகள் தகுதி!!

292

brasil

உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக இதுவரை 10 அணிகள் தகுதி பெற்றுள்ளன. கால்பந்து திருவிழாவான உலக கிண்ண கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

2010ம் ஆண்டு உலக கிண்ண போட்டி தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் சம்பியன் பட்டம் பெற்றது. 2014ம் ஆண்டுக்கான உலக கிண்ணம் கால்பந்து போட்டி பிரேசிலில் ஜூன் 12ம் திகதி முதல் ஜூலை 13ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி நேரடியாக தகுதி பெற்றுவிட்டது. மீதியுள்ள 31 அணிகளும் தகுதி சுற்று மூலம் தகுதி பெறும். ஒவ்வொரு கண்டம் வாரியாக அணிகள் தேர்வு செய்யப்படும்.

இதன்படி இதுவரை உலக கிண்ண கால்பந்து போட்டிக்கு 10 அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆசிய கண்டத்தில் இருந்து 4 அல்லது 5 நாடுகள் தகுதி பெற வேண்டும். ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, ஈரான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

வடக்கு, மத்திய அமெரிக்க மற்றும் கரிபீயனில் இருந்து 3 அல்லது 4 நாடுகள் தகுதி பெறவேண்டும். அமெரிக்கா, கோஸ்டாரிகள் அணிகள் தகுதி பெற்று உள்ளன.

ஐரோப்பா கண்டத்தில் இருந்து இத்தாலி, நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 11 அணிகள் தகுதி பெற வேண்டும்.

தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து 2 முறை சம்பியனான அர்ஜென்டினா மட்டும் தகுதி பெற்று உள்ளது. இன்னும் 3 அல்லது 4 நாடுகள் தகுதி பெற வேண்டும்.

ஆபிரிக்க கண்டத்தில் இருந்து ஒரு நாடு கூட தகுதி பெறவில்லை. ஆப்பிரிக்காவில் இருந்து 5 அணிகள் தேர்வாகும். உலக கிண்ண போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.