6000 பேரை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்த ஆட்கடத்தல் வர்த்தகர்..!

657

ausகிரிபத்கொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகர், கடந்த மூன்று ஆண்டுகளில் 6000 பேரை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் ஆட்களை அனுப்பி வைத்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதான சந்தேக நபர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில், 2008ம் ஆண்டு மற்றும் கடந்த மாகாணசபைத் தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் குறித்த நபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று கோடி ரூபா செலவிட்டதாகவும் இந்தப் பணம் மக்களை அவுஸ்திரேலியா அனுப்புவதாகத் தெரிவித்து பெற்றுக் கொண்டவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கள்ளக் காதலியை பார்க்கச் சென்ற போது குறித்த நபரை கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபருக்கு திருகோணமலை, கிரிபத்கொட மற்றும் குருணாகல் ஆகிய இடங்களில் வீடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.