குழந்தையை அடித்துக் கொடுமைப்படுத்திய கொடூரத் தாய் : கமெராவில் சிக்கிய அதிர்ச்சிக் காட்சிகள்!!

605

டெல்லியில் 18 மாதமே ஆன மகனை அவரது தாய் கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிசிடிவி காட்சியில், பெண் ஒருவர் தனது குழந்தையை கீழே தள்ளி, காலால் மிதிக்கிறார். கதறி அழுதும் அந்த பிஞ்சு குழந்தையை விடாமல் கொடுமைப்படுத்துகிறார்.

இந்த சிசிடிவி காட்சிகளை அவரது மாமியார் சஹானா தான் பதிவு செய்துள்ளார்.

நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த கொடுமைக்கு ஆதாரத்துடன் முடிவு கட்ட வேண்டும் என்று அவர் வீட்டின் அறையில் சிசிடிவியை பொறுத்தினார்.

இந்நிலையில் பதிவான இந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து சஹானா தனது மருமகள் மீது புகார் கொடுத்துள்ளார்.

சஹானா கூறுகையில், எனது மகனுக்கு இவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் 3 குழந்தைகள் மற்றும் எனது மகனை அவர் தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். சரியான ஆதாரம் கிடைக்காததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தற்போது தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளது. அவரது மனநிலை குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.