7 வயது தம்பியை துடி துடிக்க கொன்ற அண்ணன் : பின்னணி என்ன?

941

இந்தியாவில் அண்ணன் ஒருவன் தனது 7 வயது தம்பியை கிணற்றில் தள்ளி துடி துடிக்க கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் பவானிப்பூர் கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. இக்கொடூர செயலில் ஈடுபட்ட 22 வயதான அங்கிட் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று வெளியே சென்ற அங்கிட் தம்பி ஆதித்யா வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை தேடி அலைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆதித்யா கிணற்றில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் அண்ணன் அங்கிட் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசாருக்கு அங்கிட் மீது சந்தேகம் வர அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தம்பியை இரண்டு பேருடன் சேர்ந்து கிணற்றில் தள்ளி கொன்றதை அங்கிட் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் குடும்ப சொத்து முழுவதையும் தானே கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அங்கிட் தன் தம்பியை கொன்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கிட்டை கைது செய்துள்ள பொலிசார் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.