கோவா விமான நிலையத்தில் விமானத்தின் சில்லு கழன்று விபத்து : 15 பேர் காயம்!!

620

 
கோவா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஜெட் எயார்வேஸ் (9எம் 2374) விமானத்தின் சில்லு கழன்று நிலைதடுமாறி ஓடுபாதையை விட்டு விலகி விமானம் 360 டிகிரி சுழன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தின்போது விமானத்தில் 7 ஊழியர்கள் மற்றும் 154 பயணிகள் இருந்தனர். இதில் 15 பயணிகள் காயம் அடைந்ததுடன் உடனடியாக. காயம் அடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஜெட் ஏர்வேசுக்கு சொந்தமான 9எம் 2374 ரக விமானம் டபோலிம் விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றது. விமானம் தரையில் இருந்து புறப்பட்டு சென்ற போது விமானத்தின் சில்லு கழன்றதால் விமானம் நிலைதடுமாறி வீதியை விட்டு விலகி ஓடியது.

இதனால் விமானத்தின் வயிற்றுப் பகுதியானது தரையில் உரசிய வண்ணம் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் 360 டிகிரி சுழன்று நின்றது.

விமானம் மோதியதும் மீட்பு படையினர் விரைந்து வந்து விமானத்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டதுடன் பயணிகள் சற்றும் தாமதிக்காமல் அவசரகால கதவு வழியாக வெளியேறினர்.

இதனால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருகிறது.