ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

774

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு குணசுந்தரி என்ற பெண், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அந்த வளாகத்தில் இருந்த புல்தரை வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவர் தரையில் கிடந்த மின்சார வயரை கவனக்குறைவாக மிதித்ததால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதனால் தூக்கியடிக்கப்பட்ட அந்த பெண்ணை அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மின்சார வயரை அஞ்சலி செலுத்த வருபவர்கள் செல்லும் வழியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் வைத்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.