சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு : ஜெயலலிதாவின் சமாதியில் விஷம் குடித்த தொண்டர்!!

789

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, நேற்று அதிமுக தலைமை அலுவலகம் வந்து பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை கண்டித்து, அதிமுக தொண்டர் சுவாதி ஆனந்த், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் விஷம் குடித்தார்.

அருகில் இருந்தவர்கள் உடனே அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட சுவாதி ஆனந்த், திருவள்ளுர் மாவட்டம் காரனோடையைச் சோ்ந்தவர்.

இதேவேளை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் சசிகலாவை கண்டித்து அவரது உருமை பொம்மையை எரித்தனர்.

அறந்தாங்கி அருகே மறமடக்கி கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் மெய்யநாதனின் ஊர். இங்கு அதிமுகவுக்கு அதிக வாக்குகள் பதிவான கிராமம். இந்த கிராமத்தில் மறமடக்கி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கடைவீதி பகுதியில் 150க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பின்னர் ஜெ. தீபாவிற்கு ஆதரவாக கோசமிட்ட நிலையில் சசிகலாவிற்கு எதிர்ப்பாக கோஷமிட்டனர்.

கூட்டத்தின் நடுவே மையப்பகுதியில் சசிகலாவின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சசிகலாவை பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்கும் நிலையில் அதிமுக தொண்டர்கள் அதிகம் உள்ள மறமடக்கி கிராமத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.