பிரதேச அபிவிருத்தியே முதற்பணி – ஐ.தே.க. வவுனியா மாவட்ட வேட்பாளர் பிரசாத்..!

1768

எதிவரும் வடமாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்றால், பிரதேச அபிவிருத்திப் பணிகளுக்கே தாம் முன்னிரிமையளிக்கப் போவதாக வவுனியா மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் பிரசாத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வவுனியா மகாறம்பைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இக்கருத்தினை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“பலவருடங்களாக பல இன்னல்களைச் சந்தித்துவந்த வடபகுதி மக்களுக்கு முழுமையான அபிவிருத்திப் பணிகளை இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. தேர்தல் காலங்களில் மக்களை அடிக்கடி சந்திக்கும் பிரதிநிதிகளை தேர்தல் முடிந்தபின் மக்கள் தேடினாலும் காணமுடியாது.

இதனால் மக்களுடன் மக்களாக வாழும் ஒருவரை மக்கள் பிரதிநிதியாக தெரிவுசெய்வது மிக அவசியமாகும். பிரதேசத்தின் பிரச்சனைகளை நன்கு அறிந்த ஒருவரினால் மட்டுமே பிரதேச அபிவிருத்திப் பணிகளை முழுமையாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

இந்த வகையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினராக நான் செய்த அபிவிருத்திப்பணிகள் உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். ஒரு பிரதேச சபை உறுப்பினராக வீதி அபிவிருத்திப் பணிகள், ஆலய அபிவிருத்திப் பணிகள், விளையாட்டுக்கழக அபிவிருத்திப்பணிகள் என பல திட்டங்களை முன்னெடுத்திருக்கிறேன்.

என்னை மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்தால் இன்னும் பலமடங்கு அபிவிருத்திப் பணிகளையும் சேவைகளையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன். நான் அரசியல்வாதியாக வாழ்ந்ததில்லை, மக்களுடன் மக்களாகவே வாழ்கிறேன், என்றுமே மக்கள் பிரதிநிதியாகவே இருப்பேன்.

எதிர்வரும் தேர்தலில் யானைச் சின்னத்திற்கும் எனது இலக்கமான ஐந்தாம் இலக்கத்திற்கும் வாக்களித்து உங்கள் பிதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஆணையை எனக்கு வழங்குங்கள்.”

என்று தெரிவித்தார்.

pirasath1

pirasath2