வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.
இந்தநிலையில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் பேனர்களை நீக்க, இன்று முதல் பொலிஸாருடன் இணைந்து விஷேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மாகாண சபை தேர்தலை முன்னிட்டு தற்காலிக அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகளும் நிறைவடையவுள்ளன.
இதுவரை அடையாள அட்டைகளைப் பெறாதவர்கள் இன்றைக்குள் கிராம சேவகர்கள் ஊடாக தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண தேர்தல்கள் தொடர்பில் சட்ட வரையறைகளை மீறியதாக 140 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 430 முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.





