திரிஷாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த நடிகர் கருணாஸ்!!

612

பீட்டாவுக்கு ஆதரவாக செயல்படும் நடிகை த்ரிஷாவின் படப்பிடிப்பை எங்கும் நடத்தவிட மாட்டோம் என்று நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கிய நடிகை த்ரிஷாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நேற்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவான பதிவுகள் பலரை மேலும் கோபப்படுத்தியது.

ஆனால் அதை தான் பதிவிடவில்லை என்றும், தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை எனவும் குறிப்பிட்ட த்ரிஷா, டுவிட்டர் கணக்கை செயலிழக்க செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கு நடிகர் சங்க துணைத் தலைவர் என்ற அடிப்படையில் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவின் படப்பிடிப்பை எங்கும் நடத்தவிட மாட்டோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருக்கும் கருணாஸ் இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.