கண்ணிவெடிகளை அகற்ற ஆளில்லா விமானத்தைக் கண்டு பிடித்த 14 வயது மாணவன்!!

799

கண்ணிவெடிகளை பாதுகாப்பாக அகற்ற ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்றை குஜராத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கண்ணி வெடிகளை அகற்றும் பிரச்சினை மிகப்பெரும் சவாலாக உரு வெடுத்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் குஜராத்தைச் சேர்ந்த 14 வயது மாணவர் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்கும் ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்கியுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் பாபு நகரைச் சேர்ந்த 14வயதுடைய ஹர்ஷவர்தன் ஜாலா அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயது முதலே ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர், கண்ணிவெடிகளை அகற்றுவதற் காக 3 விதமான ஆளில்லா குட்டி விமானங்களை உருவாக்கியுள் ளார்.

இதில் 2 விமானங்களை தயாரிக்க அவரது தந்தை ரூ.2 லட்சம் வழங்கினார். மாணவரின் திறமையை அறிந்த மாநில அரசு ரூ.3 லட்சம் நிதியுதவியை அளித் தது. அதன் மூலம் மேம்படுத்தப்பட்ட 3வது ஆளில்லா விமானத்தை ஜாலா உருவாக்கியுள்ளார்.