தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு விடுவிப்பு..!

600

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வவுனியா நகர்ப்பகுதியில் நேற்று மும்முரமாக இடம்பெற்று வந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர்   க.சந்திரகுலசிங்கம் (மோகன்) நேற்றையதினம் வவுனியா நகரெங்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் வவுனியா பொலீசார் உடனடியாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறுத்துமாறு எச்சரித்ததாகவும், தொடர்ந்து பிரச்சார நடவடிக்கைகள் தொடர்ந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் சந்திரகுலசிங்கம்(மோகன்) உட்பட அவரது ஆதரவாளர்களுமாக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வவுனியா பொலீசாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் கையெழுத்து பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட வீட்டுச் சின்னத்தை தாங்கிய ஊர்தியும், அதன் சாரதியும் இதுவரை விடுவிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

mohan1
mohan2