காதலர்­க­ளுக்கு உத­­விய 13 வயது சிறுவன் கொலை செய்­யப்­பட்டு கோவில் சூலா­யுதத்தில் குத்திவைக்கப்­பட்ட கொடுமை!!

651

காத­லர்­க­ளுக்கு உதவி செய்த 13 வயது சிறுவன் கொலை செய்­யப்­பட்டு கோவிலிலுள்ள சூலா­யு­தத்தில் குத்தி வைக்­கப்­பட்ட சம்ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் தஞ்சை மாவட்டம், பாப­நாசம் வீராஞ்­சேரி வடக்கு வீதியைச் சேர்ந்­தவர் முரு­கா­னந்தம். விவ­சாயி. இவ­ரது மகன் அருண்­குமார்(13). 8ஆம் தரம் படித்து வந்­துள்ளார்.

நேற்று முன்­தினம் குறித்த பகு­தி­யி­லுள்ள கோவிலின் சூலா­யு­தத்தில் அருண்­குமார் உடல் குத்­தி­வைக்கப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து பொலிஸார் விசா­ரணை செய்­ததில், அதே பகு­தியை சேர்ந்த குரு­நாதன் மகள் கலை­செல்வி(19). குடந்­தை­யி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பணி புரிந்து வரு­கிறார்.

இவ­ருக்கும், தேவ­னோடை பகு­தியை சேர்ந்த அழகர் மகன் அருள் (22) என்­ப­வ­ருக்கும் காதல் இருந்து வந்­தது. இவர்­க­ளது காத­லுக்கு அருண்­குமார் உதவி செய்து வந்­துள்ளார்.

3 மாதங்­க­ளுக்கு முன் காத­லர்கள் இரு­வரும் வீட்டை விட்டு வெளி­யேறி திரு­மணம் செய்து கொண்­டனர். ஆத்­தி­ர­ ம­டைந்த கலை­செல்­வியின் சகோ­தரன் பொன்­னு­சாமி கதி­ரவன் (23), தாய்­மாமன் சரவணன் (35) ஆகியோர் அருண்­குமார் மீது கோபத்தில் இருந்து வந்­தனர்.

அவர்கள் இரு­வரும் அருண்­கு­மாரை அரி­வாளால் வெட்டிக் கொலை செய்து உடலை கோயில் சூலாயுதத்தில் தலை­கீ­ழாக குத்தி வைத்­துள்­ளனர்.

இதனை­ய­டுத்து பொன்­னு­சாமிகதி­ரவன், சர­வணன் ஆகி­யோரைக் கைது செய்த கபிஸ்தலம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை செய்து வரு­கின்­றனர்.