இளம்பெண்ணை ஆட்டோவுடன் தரதரவென இழுத்துச் சென்ற ஓட்டுநர் : பதற வைக்கும் வீடியோ!!

508

தெலுங்கானாவில் ஓட்டுநர் ஒருவர் ஆட்டோவுடன் இளம்பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹைடர்கூடா பகுதியில் அட்டாபூரை சேர்ந்த ஷபானா என்பவர் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று ஷபானா மீது லேசாக மோதியது. உடனே கோபமடைந்த ஷபானா ஆட்டோவை பிடித்தபடி ஓட்டுனருடன் தகராறு செய்தார்.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் திடீரென ஆட்டோவை இயக்கியதில் அந்த பெண் சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.

உடனே ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர் பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் இளம்பெண் ஷபானா படுகாயம் அடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் தப்பியோடிய ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுதொடர்பான அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.