கண­வ­னை கள்­ளக்­கா­த­ல­னுடன் இணைந்து கொன்ற மனைவி!!

637

கள்­ளக்­கா­த­லுக்கு இடை­யூ­றாக இருந்த கணவன் மனை­­வியின் கள்­ளக்­கா­த­லனால் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் செங்கல்பட்டைச் சேந்தவர் முரளி (36). பெரும்புதூரிலுள்ள தனியார் நிறு­வ­னத்­தில் வேலை பார்த்து வந்தார். மேலும் அவர், சிறிய பொக்லைன் இயந்திரங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுவந்தார். இந்நிலையில், கடந்த 19ஆம் திகதி இரவு முரளி விபத்தில் இறந்துவிட்டதாக மனைவி வனஜாவுக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து பாலூர் பொலிஸார் முரளி இறந்ததை விபத்து வழக்காக பதிவு செய்து அவ­ரது உடலை அடக்கம் செய்­தனர். இந்நிலையில், வனஜாவின் வீட்டுக்கு கடந்த திங்கட் கிழமை சென்­ற இளைஞர், மாலை வரை வெளியே வரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அந்த வீட்டை பூட்டி பொலி­ஸா­ருக்கு தகவல் தெரிவித்துள்­ளனர்.  இத­னை­ய­டுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் வனஜா மற்றும் அவருடன் இருந்த இளை­ஞரை மீட்டு பொலிஸார் விசா­ரணை நடத்­தினர். இத­ன்­போது அப்பகுதி மக்கள், வனஜாவின் கணவர் முரளியின் சாவில் மர்மம் இருப்பதாக பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பொலி­­ஸார் வனஜா, முரளியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதன்­போது வன­ஜா­வின் கண­வனை தானே நண்­பர்­க­ளுடன் இணைந்து கொலை செய்­­ததாக தெரி­வித்­தார்.

முரளி கம்பெனிக்குள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு உதிரிப் பாகங்களை தூக்கி செல்லும் 10 சிறிய பொக்லைன் வைத்திருந்தார். அப்போது பெரும்புதூர் மேட்டு பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (28) என்பவருக்கு, பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு கொடுத்தார்.

இதனால் முரளியும், ரமேஷும் நண்பர்களானார்கள். அப்போது முரளி வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரமேஷ் கலந்து கொண்டார். இந்நிலையில்முரளி சொந்தமாக வீடு கட்டி சில மாதங்களுக்கு முன் கிரகப் பிரவேசம் செய்தார். அப்போது, வனஜாவுடன் ரமேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் ரமேஷின் பேச்சால் கவரப்பட்ட வனஜா, முரளியின் செல்போனிலிருந்து செல்போன் எண்ணை இரகசியமாக எடுத்துள்ளார். பின்னர், செல்போன் மூலம் வனஜா, ரமேஷுக்கு காதல் வலைவீசினார்.

இதில் சிக்கிய ரமேஷ், தன் நண்பன் முரளி இல்லாத நேரத்தில் வீட்டுக்குச் சென்று வனஜாவுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இத­னி­டையே ஒரு நாள் ரமே­ஷ் வாங்கிக் கொடுத்த செல்­போ­னை முரளி கண்­டுள்ளார்.

அப்­போ­து, ‘இந்த செல்­போன் யாருடையது, எப்போது வாங்கினாய்?’ என்று கேட்டார். ஆனால், வனஜா எந்தப் பதிலும் கூறவில்லை. அந்த செல்போனை ஆராய்ந்த போது அதில் ரமேஷின் செல் போன் எண் மட்டுமே இருந்தது.

அதில் வீடியோ, வாட்ஸ் அப் மெசேஜ், போட் டோ இருந்தது. இதனால் முரளி, மனைவி வன ஜாவை கண்டித்தார்.

இத­னை­ய­டுத்து ரமேஷிடம் செல்போனில் பேசி வனஜா அழுதுள்ளார். அதற்கு ரமேஷ், முரளியை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், முரளியை கொல்லும் நோக்கில், ரமேஷ் தனது நண்பர்களுடன் கடந்த 19ஆம் திகதி ஒரகடம் பகுதிக்கு சென்றார்.

அங்கு வேலையில் இருந்து பைக்கில் வந்த, முரளியை வழிமறித்து, அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனே ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கட்­டை­களால் ரமேஷை அடித்து கொலை செய்து விட்டு, அங்கிருந்து சடலத்தை வீசிவிட்டு, அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்­கி­­ளையும் , விபத்தில் ஏற்பட்டதை போல் உடைத்து போட்டுவிட்டு சென்றனர்.

இதனைய­டுத்­து வனஜாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் வனஜா, தனக்கு எதுவும் தெரியாதது போல கதறி அழுது அனைவரையும் நம்ப வைத்தார். முரளி வாகன விபத்தில் இறந்தார் எனவும் முறைப்­பாடு செய்­துள்ளார்.

ஆனால், அவரது வீட்டில் ஓர் இளை­ஞர் முழுநாள் தங்கிச் சென்றதால், பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, இரு­வ­ரையும் பிடித்துக் கொடுத்தனர். இத­னை­ய­டுத்து ரமே­ஷையும் வன­ஜா­வையும் கைது செய்த பொலிஸார் சம்­பவத்­துடன் தொடர்­­பு­டைய ஏனை­ய­­வர்­க­ளைத் தேடி வரு­கின்­ற­னர்.