மாடியிலிருந்து தன் குழந்தையை கீழே வீசிய பெண் : பதறவைக்கும் வீடியோ!!

623

இந்தியாவில் தன்னுடைய 2 வயது குழந்தையை கோபத்தில் மாடி படியிலிருந்து தூக்கி வீசிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் டெல்லி மாநிலத்தில் வசித்து வருபவர் Nitin Gupta, இவர் மனைவியின் பெயர் Sonu Gupta (26) இவர்களுக்கு Anshu (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று Sonuவுக்கும் அவர் மாமியாருக்கும் குடும்ப சொத்து விடயமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த Sonu மெத்தையில் தூக்கி கொண்டிருந்த தன் குழந்தை Anshuவை வேகமாக தூக்கினார். பின்னர் வீட்டு கதவின் அருகில் உள்ள மாடிப்படிக்கு வந்து இரக்கமில்லாமல் குழந்தையை தூக்கி கீழே போட்டுள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அவர்கள் வீட்டிலிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தை Anshuவின் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது.

உடனே குழந்தையின் தந்தை Nitin Gupta அருகில் இருந்த மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தார். மேலும், தன் மனைவி மீது பொலிசாரிடம் அவர் புகார் கூற Sonu மீது அவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.