காப்பாற்றுமாறு கதறிய பள்ளி மாணவன் : துடிதுடிக்க எரித்த விடுதி காப்பாளர் : அதிர்ச்சி தரும் காரணம்!!

939

ஆந்திராவில் 14 வயது பள்ளி மாணவன் ஒருவன் கழிவறை சுத்தம் செய்ய மறுத்ததால் விடுதி காப்பாளர் ஒருவர் தீவைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தின் விஜயவாட பகுதியில் ஆதரவற்ற சிறார்களுக்கான விடுதி ஒன்று உள்ளது. இங்குள்ள கழிப்பறையை அங்குள்ள மாணவர்கள் தான் சுத்தப்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரவீன்(14) என்ற மாணவனை விடுதிகாப்பாளரான வெங்கடேஸ்வரன் கழிப்பறையை சுத்தம் செய்யும் படி கூறியுள்ளார். இதற்கு பிரவின் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வரன் விடுதியில் வைத்திருந்த பெட்ரோலை அச்சிறுவன் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

வலி தாங்கமுடியாமல் துடி துடித்த சிறுவன் தன்னை காப்பாற்றுமாறு கதறியுள்ளான். ஆனால் வெங்கடேசனோ தான் சொல்வதை செய்தால் தான் காப்பாற்றுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அதன் பின்னர் சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதில் சிறுவனுக்கு 70 சதவீத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரவினின் சகோதரர் கூறுகையில், இந்த சம்பவம் குடியரசு தினத்தன்று மாலை 4 மணியளவில் நடந்ததாகவும், இந்த உண்மையைச வெளியில் சொல்லக் கூடாது என்று காப்பாளர் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளான்.