7 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன் : மனம் திறந்த பிரபல நடிகை!!

676

கடந்த ஜனவரி 30 ஆம் திகதி பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக டெல்லியில் உலக மாநாடு ஒன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகையான ஆஷ்லே தனது வாழ்வில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகளை விவரித்துள்ளார்.

ஏழு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கும், 14 வயதில் வன்புணர்வுக்கும் ஆளான தான் மீண்டும் 30 வயதில் அந்தக் கொடுமைக்கு ஆளானதாகக் குறிப்பிட்டார்.

மேலும் பாலியல் பாகுபாடு பற்றி தொடர்ந்து பேசிய ஆஷ்லே, தான் பெண் என்ற காரணத்தினாலேயே, சக ஆண் நடிகர்களைவிட தன்னுடைய சம்பளம் 40% குறைவாக நிர்ணயிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தன் தாய்நாடான அமெரிக்கா, பாலின சமத்துவத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறது என்று தெரிவித்த அவர், ‘கிஸ் த கேர்ள்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, ஹாலிவுட்டின் சூப்பர் பாஸ் ஒருவர், தன்னை தன் ஓட்டல் அறைக்கு வரச் செய்து தான் குளிப்பதை பார்க்கச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஹாலிவுட்டின் அதிகாரமிக்க பாஸ் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன். ஓட்டலுக்கு வா, சேர்ந்து சாப்பிடலாம் என்ற வார்த்தைகளில் என்னை அழைத்தார் என்று குறிப்பிட்ட ஆஷ்லே, தன் சக நடிகைகளுக்கும் இது நேர்ந்ததை என்பதையும் குறிப்பிட்டார்.

உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக் கூடிய சட்டங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறது. பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்களான நாம் ஒன்றாகக் கரங்கள் கோக்கும்போது, நம்மால் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

குற்றத்துக்கான தண்டனை குற்றவாளிக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விளைவுகள் ஏற்படுவதை நாம் தடுக்க வேண்டும் என மாநாட்டில் கூறியுள்ளார்.