ஃபேஸ்புக், டுவிட்டரில் இருந்து வெளியேறும் மக்கள் : காரணம் என்ன??

340

twitter_facebook1

இணையத்துக்கு அடிமையாவது, தனிமை பறிபோவது மற்றும் நரம்பு பிரச்சினையால் பலர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நிறுத்தி வருகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

பலர் அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இணையமே கதி என்று இருக்கின்றனர். மேலும் ஃபேஸ்புக், டுவிட்டர் இருப்பது அவர்களுக்கு மேலும் வசதியாக உள்ளது.

நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் சமூக வலைதளங்களில் அப்டேட் செய்பவர்கள் உள்ளனர். இந்நிலையில் வியன்னா பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் சமூக வலைதளங்கள் பயன்பாடு குறித்து ஒரு ஆய்வை நடத்தினர்.

விக்கிலீக்ஸ், தேசிய பாதுகாப்பு ஏஜென்சி ஆகியவை பல இரகசியங்களை அம்பலப்படுத்தியதையடுத்து சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் சொந்த விஷயங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அஞ்சுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தங்களின் சொந்த விஷயங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்து பலர் தங்களின் ஃபேஸ்புக் கணக்கை நிறுத்தி வருகின்றார்களாம்.

இணையத்திலேயே கிடையாய் கிடப்பது, தனிமை பாதிக்கப்படுவது மற்றும் நரம்பு பிரச்சினையால் பலர் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுகிறார்களாம். சமூக வலைதளங்களை பயன்படுத்தி சலிப்பு ஏற்படுவதாலும் சிலர் அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.