கல் மனிதனாக மாறிவரும் 8 வயதுச் சிறுவன் : வெறுத்து ஒதுக்கிய மக்கள்!!

635

வங்கதேசத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் அரிய வகை தோல் வியாதியால் உடல் முழுவதும் கல் போன்று மாறிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்தவன் Mehendi Hassan (8) . இச்சிறுவனுக்கு அரிய வகை தோல்வியாதி ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சிறுவனின் உடல்களில் உள்ள தோல்களில் தடித்த செதில் போன்றும், மணல்களில் இருக்கும் கற்களை போன்று காணப்படுகிறது.

இந்த வகை நோய் தாக்கத்தினால் அச்சிறுவன் பெரிய வலியை தாங்கி வருவதாகவும், இதனால் அவன் துடி துடித்து போவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுவனின் தாயார் Jahanara Begum கூறுகையில், தன்னுடைய மகனை மற்ற குழந்தைகள் நிராகரிக்கின்றனர். இதற்கு காரணம் தன் மகனுக்கு இருக்கும் இந்த நோய் அவர்களுக்கு வந்துவிடுமோ என்று அச்சப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

இவன் எட்டு வருடங்களாக தங்கள் வீட்டை விட்டு அதிக அளவு வெளியே போவதில்லை என்றும் தன் மகன் வெளியே சென்றால் மக்கள் அனைவரும் ஒரு வித அச்சத்துடனே பார்க்கின்றனர் என்று மனம் உருகி கூறியுள்ளார்.

மேலும் இந்த ஊரில் உள்ள யாருக்கும் தன் மகனை பிடிக்காது என்றும் தன் மகன் முன்னால் சாப்பிடக் கூடாது என்று கூறுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

இந்த நோயினால் வலி தாங்க முடியாமல் தினந்தோறும் அழுவான் என்றும், இதுவே அவனுடைய அழிவுக்கு காரணமாகிவிடுமோ என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவன் பிறந்து 12 நாட்கள் இருந்த போது இது போன்று சிறிய அளவில் வந்ததாகவும், இதை தானும் தன் கணவரும் கொசுக்கடியாக இருக்கும் என்று அஜாக்கிரதையாக இருந்துவிட்டதாக கண் கலங்கினார்.

அதன் பின்னர் தற்போது இது விஸ்வரூபம் எடுத்துள்ளது, தாங்களும் பல மருத்துவர்களிடம் சென்று விட்டதாகவும், இது சரியாவது போல் தெரியவில்லை என கூறியுள்ளார்.

தன் கணவர் ஒரு வேன் டிரைவர் என்றும் தங்கள் அன்றாட வாழ்விற்கே அவருடைய சம்பாத்தியம் சரியாகிவிடும் எனவும் அதில் இவனுக்கு வேறு ஒரு தடவை மருத்துவமனை சென்றால் மருத்துவச் செலவும் (£10) ஆகும் என கூறியுள்ளார்.

இதனால் கடந்த ஒரு வருடமாக எந்த மருத்துவரிடமும் தாங்கள் அழைத்துச் செல்லவில்லை. இதனால் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும், அதுமட்டுமின்றி அரசாங்கமும் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.