புதிய மைல் கல்லை எட்டியது பேஸ்புக் லைட் அப்பிளிக்கேஷன்!!

357

பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் வலைத்தளமானது விரைவில் 2 பில்லியன் பயனர்களை எட்டவுள்ளது.

இவ் வலைத்தளத்தினை அதிகளவானவர்கள் தமது மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக விசேட அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எனினும் குறைந்தளவு டேட்டா பாவனை மற்றும் விரைவாக செயற்படக்கூடியது என்பவற்றின் அடிப்படையில் பேஸ்புக் லைட் (Facebook Lite) அப்பிளிக்கேஷனே அதிக பயன்பாட்டில் காணப்படுகின்றது.

தற்போது இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 200 மில்லியனை எட்டியுள்ளதாக பேஸ்புக்கின் தலைமை இயக்குனரான Sheryl Sandberg தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாத அறிக்கைகளின்படி இந்த எண்ணிக்கை 100 மில்லியனாக காணப்பட்டதாகவும், அதன் பின்னரான இந்த ஒரு வருட காலத்தில் மேலும் 100 மில்லியனால் அதிகரித்து 200 மில்லியனை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.