அதிமுக நிர்வாகி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

508

திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி ஒருவர் ஓட ஓட மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.

அதிமுக முன்னாள் நகர செயலாளர் கனகராஜே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த கனகராஜை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர்.

இதில் கனகராஜ் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், மர்ம நபர்கள் சம்பவயிடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

கொலை குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சொத்து தகராறு காரணமாக அவர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை பொலிசார் கைப்பற்றிள்ளனர்.

அதன் மூலம் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான திமுக பிரமுகர்கள் பாபு, ராஜா மற்றும் சரவணன் ஆகியோரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.