பாம்பை துன்­பு­றுத்­திய குற்­றச்­சாட்டில் நடிகை ஸ் ருதி உல்ஃபட், நடிகர் பியர்ல் புரி உட்­பட 4 பேர் கைது!!

336

பாம்பு ஒன்றை கையில் வைத்­தி­ருந்து புகைப்­படம் பிடித்­துக்­கொண்­டதால், இந்­திய தொலைக்­காட்சி நடிகை ஸ்ருதி உல்ஃபட், உட்­பட 4 பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

மும்­பையைச் சேர்ந்த தொலைக்­காட்சி நடிகை ஸ்ருதி உல்ஃபட் மற்றும் நடிகர் பியர்ல் புரி ஆகியோர் பாம்பை கையில் வைத்­தி­ருக்கும் வீடி­யோவும் புகைப்­படங்களும் கடந்த ஒக்­டோபர் மாதம் வெளியாகி­ன.

அதை­ய­டுத்து இவர்கள் இரு­வரும் பாம்பை துன்­பு­றுத்­தி­ய­தாக விலங்கு நல ஆர்­வ­ல­ரான சுனீஷ் சுப்ரமணியன் உட்­பட சிலர் இந்­திய வனத்­துறை அதி­கா­ரி­க­ளிடம் முறைப்­பாடு செய்­தனர்.

இந்­நி­லையில், தான் கையில் பிடித்து வைத்­தி­ருந்த பாம்பு உண்­மை­யான பாம்பு அல்ல என நடிகை நடிகை ஸ்ருதி கூறினார். அதனால் அப்­ பு­கைப்­ப­டங்­க­ளையும் வீடி­யோ­வையும் இந்­திய வனத்­துறை அதி­கா­ரிகள் தட­ய­வியல் ஆய்­வ­கத்­துக்கு அனுப்பி வைத்­தனர்.

அங்கு நடத்­தப்­பட்ட ஆய்­வு­களில், நடிகை ஸ்ருதியும், நடிகர் பியர்ல் புரியும் உண்­மை­யான நல்ல பாம்பை கையில் பிடித்து வைத்­தி­ருந்­தமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

நாகார்­ஜூனா எனும் தொலைக்­காட்சி தொடர் ஒன்­றுக்­கான படப்­பி­டிப்புக்கு கொண்டு வரப்­பட்ட அந்த நல்ல பாம்பை அவர்கள் பிடித்து வைத்­தி­ருந்­தனர் எனவும் கண்­ட­றி­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து நடிகை ஸ்ருதி, நடிகர் பியர்­புரி மற்றும் அந்த தொலைக்­காட்சி தொடர் தயாரிப்பாளர்களான உட்கர்ஷ் பாலி, நிதின் சோலங்கி ஆகிய நால்­வர் கைது செய்யப்பட்டனர். வனத்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.