சபாநாயகர் தனபாலுக்கு சேலை அனுப்பிய திமுகவினர்!!

739

தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலுக்கு திமுகவினர் பார்சல் மூலம் சேலை அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை தமிழக சட்டசபையில் திமுக கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய முறையில் நடத்த வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுப்பட்டனர்.

இதில் சபாநாயகர் தன் சட்டையை திமுகவினர் கிழித்து விட்டதாக குற்றம்சாட்டினார். அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்த நிலையில் சட்டசையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து சட்டசபையில் நடந்ததை விளக்கினார்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து நகர திமுக-வினர், சென்னையில் உள்ள சபாநாயகருக்கு பார்சல் மூலம் சேலை அனுப்பியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.