ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மட்டும் போதும் : தீபா அடம்பிடிப்பதன் பின்னணி இதுதான்!!

302

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது தமக்கு அக்கறை இல்லை என்றும் ஆனால் அவர் பயன்படுத்திய பேனா மட்டும் போதும் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று தீபா அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய தீபா, தனது சகோதரர் தீபக்கின் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார் என்று குற்றம் சாட்டினார்.

போயஸ் தோட்ட இல்லம் தனக்கும் தீபாவிற்கு மட்டுமே சொந்தம் என்று தீபக் கூறியதற்கு, தமக்கு சொத்துக்களின் மேல் ஆசையில்லை என்றார். மேலும் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த பேனா ஒன்று மட்டும் போதும் எனவும் அவர் கூரியுள்ளார்.

ஆனால் ஜெயலலிதாவின் சொத்து மீது ஆர்வம் இல்லை என குறிப்பிடும் தீபா ஏன் ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மீது குறியாக இருக்கிறார் என்ற கேள்வி அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.

ஜெயலலிதா பயன்படுத்தியதாக கூறும் அந்த பேனா ஒரு பென் டிரைவ் எனவும், அதில் தான் அவரது சொத்து தொடர்பான தகவல்களும் மற்றும் பல ரகசியங்களும் பாதுகாத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட பேனா வெளிநாட்டில் இருந்து நண்பர் ஒருவரால் ஜெயலலிதாவுக்கு பரிசளிக்கப்பட்டது எனவும், அதன் பின்னர் அவர் அந்த பேனாவில் தான் அனைத்து தகவல்களையும் சேமித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்று எம்.ஜி.ஆர் தனது சொத்து தொடர்பான அனைத்து தகவல்கள் அடங்கிய ரகசிய எண் ஒன்றை தனது கைக்கடிகாரத்தில் சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் பல முயற்சிகளும் பலரால் மேற்கொள்ளப்பட்டது எனவும் பரவலாக கூறப்பட்டது.

தற்போது தீபா, ஜெயல்லிதாவின் பேனா மீது நோட்டம் விட்டுள்ளது, ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை அறிந்து கொள்ளவும் அல்லது ஜெயலலிதா தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளவுமே எனவும் பேசப்படுகிறது.

மட்டுமின்றி, இதுவரை சசிகலா தரப்பில் இருந்தோ அல்லது ஓ.பி.எஸ் அணி சார்பாகவோ அந்த பேனா குறித்து எவரும் பேச்செழுப்பாத போது, அந்த பேனாவின் முக்கியத்துவம் அறிந்தே தீபா தற்போது கோரிக்கை விடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மேலும் எதிர்காலத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கலாம் எனவும் சசிகலா தரப்புக்கு எதிராக அது திரும்பலாம் எனவும் கூறப்படுகிறது.