வழுக்­கைத்­தலை ஆண்­க­ளுக்­கான விளையாட்டுப் போட்டி!!

285

 
வழுக்கைத் தலை கொண்ட ஆண்­க­ளுக்­கான விளை­யாட்டுப் போட்­டி­யொன்று ஜப்­பானில் நடை­பெற்­றுள்­ளது. சுரூட்டா எனும் நகரில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற இப்­ போட்­டியில் 30 ஆண்கள் கலந்­து­கொண்­டனர்.

சுரூட்டா நகரின் வழுக்கைத் தலை கொண்ட ஆண்­களின் கழ­கத்­தினால் இப் ­போ­ட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. கயி­றி­ழுத்தல் போட்டி பாணியில் விநோ­த­மான போட்­டி­யொன்றில் வழுக்கைத் தலை ஆண்கள் பங்­கு­பற்­றினர். கயிறின் இரு முனை­களும் போட்­டி­யா­ளர்கள் இரு­வரின் தலை­யுடன் இணைக்­கப்­பட்­டி­ருந்­தன. அக் ­க­யிற்றை இழுத்து தமது எதி­ரா­ளியின் தலை­யி­லி­ருந்து அதை விடு­படச் செய்­வ­து தான் இப்­ போட்டி.

1989 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட மேற்­படி கழ­கத்­தினால் வரு­டாந்தம் பெப்ர­வரி 22 ஆம் திகதி இப் ­போட்டி நடத்­தப்­ப­டு­கி­றது. 64 வய­தான டோஷி­யுக்கி ஒகா­ச­வரா இவ்­ வ­ருடம் முதல் தட­வை­யாக இப்­ போட்­டியில் பங்­கு­பற்­றினார்.

இப்­ போட்டி தொடர்­பாக அவர் கருத்துத் தெரி­விக்­கையில், எனது வழுக்கைத் தலை தொடர்­பாக இது­வரை நான் கவ­லை­ய­டைந்­தி­ருந்தேன். இன்று வித்­தி­யா­ச­மாக உணர்ந்தேன்’ என்றார்.

இக் ­க­ழ­கத்தின் தலை­வ­ரான டெய்­ஜிரோ சுகோ (70) கூறு­கையில், உலகம் முழு­வ­து­மி­ருந்து ஆண்கள் இப்­ போட்டியில் பங்­கு­பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். இதன்மூலம் வழுக்கைத் தலை ஆண்களுக்கான ஒலிம்பிக் போட் டியை நாம் ஏற்பாடு செய்யலாம்’ என்றார்.