சட்டவிரோதமாக ஜரோப்பாவில் நுழைபவர்கள் மீது நடவடிக்கை தேவை : ஐ. நா சபை!!

344

unஐரோப்பியா நாடுகளுக்கு ஆப்பிரிக்க மற்றும் ஆசியா நாடுகளில் இருந்து மத்தியத்தரைக்கடலில் உள்ள இத்தாலி வழியாக மக்கள் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஆபிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளில் சண்டை மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பாக சிரியா அகதிகள் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு திருட்டுத்தனமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை தற்சமயம் அதிகரித்து உள்ளது.

இது குறித்த பிரச்சினைகளை கண்காணித்து வரும் ஐ.நா. அதிகாரி ஜாய் எசெய்லோ கூறுகையில் ஐரோப்பியாவிற்குள் சட்டவிரோதமாக இத்தாலி கடற்கரை வழியாக கடத்திவரப்படுவர்கள் ஐரோப்பிய நாடுகளில் பாலியல் தொழிலும் கட்டாய பணியாளர்களாகவும் ஆக்கப்படும் மோசமான நிலை உருவாகியுள்ளது.

இந்த மோசமான நிலையை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் மக்களை அடிமைகளாக ஆக்கிவருகின்றனர். இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்றும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படும் இப்பிரச்சினை குறித்து இத்தாலி அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து இத்தாலி உள்துறை அமைச்சகம் எந்த பதிலையும் அளிக்கவில்லை. கடந்த 2010ம் ஆண்டு இதுபோன்று கடத்திவரப்பட்ட 2400 பேரை தடுத்து நிறுத்தியதாக இத்தாலி கூறியுள்ளது.