பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் : ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு : பதவியை துறக்கும் சசிகலா?

279

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரும் அரசியல் தலைமைத்துவத்திற்கான இடைவெளி ஏற்பட்டிருப்பதுடன், அதிமுகவில் பனிப்போர் நடந்துவருகிறது.

முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டிருந்தாலும், அந்த முடிவினை வெளிப்படையாக பெரும்பான்மையினர் எதிர்த்துவருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. சினிமா பிரபலங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இந்த முடிவினை ஏற்கவில்லை.

இதற்கிடையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று பெரும்பரபரப்பை ஏற்படுத்திய ஓ.பன்னீர்செல்வம், தனக்கென்று ஒரு அணியியை உருவாக்கியிருக்கிறார். அவ் அணியை மேலும் பலப்படுத்த அடுத்தடுத்த நகர்வுகளில் களமிறங்கியிருக்கிறரா்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அது குறித்து வாய் திறக்காமல் இருந்த பன்னீர்செல்வம், பதவி பறிபோன பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அது அனைத்து உண்மைகளையும் சொல்லப்போவதாக சாடைமாடையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொன்னையன் நேற்று முந்தினம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, மார்ச் 8-ம் திகதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, மார்ச் மாதம் 8-ம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் அறிவித்திருக்கிறார்.

இதுவொருபுறமிருக்க, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை ஏற்கவேண்டும் என்றும், ஜெ.மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கருத்து வெளியிட்டிருக்கிறார். இது ஓபிஎஸ் அணியினருக்கு பெரும் சாதகமாக அமைந்திருப்பதாக பன்னீர்செல்வம் தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

இது தவிர, அதிமுகவின் தற்காலிய பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலா தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என மேலதிக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில் மீண்டும் அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுவருகின்றன.