பிரித்தானிய மகாராணியோடு கைகுலுக்கிய நடிகர் கமல்ஹாசன்!!

397

இங்கிலாந்து- இந்தியா இடையேயான 2017 ஆண்டு கலாசார வரவேற்பு விழா பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது.

இந்த விழாவினை பிரித்தானியா மகாராணி எலிசபெத் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் மகாராணியின் கணவர் பிலிப், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தியா சார்பில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நடிகர் கமல்ஹாசன், சுரேஷ் கோபி, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், பேஷன் டிசைனர் மனிஷ் அரோரா, மனிஷ் மல்கோத்ரா மற்றும் சித்தார் மாஸ்ட்ரோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது என கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது, பிரதமர் மோடி எனது பெயரை முன்மொழிந்ததை மிகப் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். இந்தியா- இங்கிலாந்து இடையேயான வரலாற்றை, கலாச்சார விழாவாக கொண்டாடும் இந்த தருணம் மிகச்சிறந்தது.

இந்தியாவில் உள்ள பல மொழிகளை இணைக்கும் பாலமாக ஆங்கிலம் இருப்பது சிறப்பான ஒன்று என்று கூறியுள்ளார்.

70 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுவதற்கு தயாராக இருக்கும் நாம், அன்றைய நாட்களில் அரும்பாடும்பாட்டு, இந்தியாவிற்கும்- இங்கிலாந்திற்கும் இடையேயான உறவை ஏற்படுத்திக்கொடுத்த நம் நாட்டின் உயிர்நாடி மகாத்மா காந்தி அவர்களை நினைவு கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில், அதிகமாக இந்திய உணவுகள், இந்திய பாராம்பரிய நடனங்கள் மற்றும் இந்திய மலர்கள் பயன்படுத்தப்பட்டன.